Home புதினங்களின் சங்கமம் அம்பாறை யுவதி நுவரேலியா விடுதியி்ல் கொலை! காதலன் தப்பி ஓட்டம்!

அம்பாறை யுவதி நுவரேலியா விடுதியி்ல் கொலை! காதலன் தப்பி ஓட்டம்!

நுவரெலியா மாகஸ்தோட்ட பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி (Cabana) ஒன்றில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

27 வயதுடைய குறித்த இளம் பெண், தனது காதலனுடன் கடந்த 07ஆம் திகதி அந்த விடுதிக்கு வருகை தந்து பணம் செலுத்தி அறையை முன்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், இன்று (10) காலை குறித்த பெண் விடுதி அறைக்குள் காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட விடுதியின் உரிமையாளர், நுவரெலியா பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர்.

சம்பவத்தையடுத்து, பெண்ணுடன் வந்த காதலன் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், சந்தேகநபரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments