Home புதினங்களின் சங்கமம் யாழ்ப்பாண மீனவர்கள் இருவர் இந்தியாவில் கரை ஒதுங்கினர்!

யாழ்ப்பாண மீனவர்கள் இருவர் இந்தியாவில் கரை ஒதுங்கினர்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் காற்றின் வேகம் காரணமாக இன்று நாட்டு படகுடன் தமிழகத்தில் கரை ஒதுங்கியுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டம் குருநகர் பகுதியைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள்
ஒரு நாட்டுப் படகில் 09.11.26 தேதி 12.00 பணிக்கு மீன் பிடிக்க புறப்பட்டு நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது
பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக திசை மாறி பாம்பன் வடக்கு கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் அருகே இன்று 10.11.26 தேதி 18.00 மணிக்கு படகுடன் கரை ஒதுங்கி உள்ளனர்.

விவரம் அறிந்து மீனவர்களை மண்டபம் காவல்துறையினர் மீட்டு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதன்போது சோன்டின்டன் ஜெனோசன் மற்றும் டிவோசன் யூடா ஆகியோரே இதன்போது தமிழகத்தில் கரை ஒதுங்கியுள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments