வவுனியா நகரப்பகுதில் 22 வயதான திருகோணமலையைச் சொந்த இடமாக கொண்ட பல்கலைக்கழக மாணவனுடன் 37 வயதான இரு பிள்ளைகளின் தாயாரான கிருசாந்தி தலைமறைவாகியுள்ளார். கிருசாந்தியின் கணவர் சிங்கப்பூரில் கப்பலில் பணியாற்றி வரும் வேளையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 13, 9 வயதான இரு ஆண் பிள்ளைகளை தனது வயோதிப பெற்றோருடன் தவிக்க விட்டு விட்டே கிருசாந்தி தலைமறைவாகியுள்ளார்.
கடைசி மகனுக்கு புலமை பரி்சில் பரீட்சை வகுப்பு எடுப்பதற்காக கிருசாந்தியின் வீட்டுக்கு கொழும்பிலிருந்து வந்து வெள்ளி இரவில் தங்கியிருந்து ஞாயிறு இரவு ரயிலில் செல்லும் வழக்கத்தை அபிசாந் கடைப்பிடித்து வந்துள்ளார். இவ்வாறான நேரத்திலேயே இருவரும் கடந்த திங்கள் அதிகாலை வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளார்கள்.
இதே வேளை அபிசாந்திற்கு காதலி இருப்பதாகவும் அவளும் கர்ப்பமாக இருப்பதாகவும் அது தொடர்பான வழக்கு ஒன்று திருகோணமலையில் நடப்பதாகவும் தெரியவருகின்றது.





