Home புதினங்களின் சங்கமம் திருகோணமலையில் ஓட்டோவில் சென்ற சிப்பாய் சுட்டுக் கொலை!!

திருகோணமலையில் ஓட்டோவில் சென்ற சிப்பாய் சுட்டுக் கொலை!!

திருகோணமலை, கப்பல்துறை பகுதியில் முச்சக்கரவண்டியொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்குள் சிலர் இருந்தபோதே, திங்கட்கிழமை (02) இரவு இத்துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய கடற்படைச் சிப்பாயே, முச்சக்கரவண்டியைச் செலுத்தி வந்தவேளையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அத்துடன், ஆனந்தன்குளம் பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 38 வயதுடைய இருவர் காயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

டி-56 (T-56) ரக ரவைதீர்க்கும் துப்பாக்கியைப் பயன்படுத்தியே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய தகராறே இத்தாக்குதலுக்குக் காரணம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் திருகோணமலைப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments