Home புதினங்களின் சங்கமம் வெளிநாட்டு கனவில் இலங்கையிலிருந்து வெளியேறிய ருசிகா தனித்தீவில் வைத்து சீரழிப்பு!

வெளிநாட்டு கனவில் இலங்கையிலிருந்து வெளியேறிய ருசிகா தனித்தீவில் வைத்து சீரழிப்பு!

இலங்கைக்கு மீண்டும் திரும்புவதற்குத் தேவையான ‘டிரான்சிட் விசா’ (Transit Visa) பெற முடியாமையின் காரணமாக, இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் நியூசிலாந்துக்கு அருகில் உள்ள குக் தீவில் (Cook Islands) சுமார் மூன்று வருடங்களாகச் சிக்கித் தவிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

பிலியந்தலை – போகுந்தர பகுதியைச் சேர்ந்த ருசிரா ரணசிங்க என்ற பெண்ணே இவ்வாறு குக் தீவில் தங்கியுள்ளார். எந்தவொரு நிபந்தனையின் அடிப்படையிலாவது தன்னை மீண்டும் இலங்கைக்கு அழைப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கை
சுமார் 9 வருடங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றிருந்த இவர், சில ஆண்டுகள் ஹொங்கொங்கில் பணிபுரிந்துள்ளார். பின்னர் 3 வருடங்களுக்கு முன்னர் அகதி விசா பெறும் நோக்கில் ஹொங்கொங்கில் இருந்து நியூசிலாந்துக்கு 3 மாத சுற்றுலா விசா மூலம் சென்றுள்ளார்.

அங்கு நிரந்தர வதிவிட உரிமையைப் பெறும் நோக்கில், புலம்பெயர்ந்தோர் ஆலோசனை நிறுவனம் ஒன்றின் உதவியை அவர் நாடியுள்ளார்.

அதன்போது, தற்காலிகமாக நியூசிலாந்தை விட்டு வெளியேறி குக் தீவில் இருந்தவாறு மீண்டும் விசாவுக்கு விண்ணப்பிக்குமாறு அந்த நிறுவனம் அவருக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி குக் தீவுக்குச் சென்ற அவர், அங்கிருந்து பலமுறை நியூசிலாந்து விசாவுக்கு விண்ணப்பித்த போதிலும் அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர் பெற்றிருந்த நியூசிலாந்து சுற்றுலா விசா நிபந்தனைகளின்படி, அந்நாட்டை விட்டு வெளியேறிய பிறகு மீண்டும் அங்கு நுழைவதற்கு அனுமதி கிடையாது.

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments