சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்.
யாழ்ப்பாணம் இணுவிலில் ஒரு ஆசிரியையின் வீட்டுக்குப் பக்கத்தில் சின்ன பெடியன் குளறி அழுத சத்தம் கேட்டதாம் இரவு நேரம் என்பதால் ரீச்சர் போய் பார்க்கேல
அடுத்த நாள் காலம விசாரிச்சால் அப்பா பிள்ளையை கடுமையாக அடித்துள்ளார்
காரணம் தான் எதிர்பார்த்த புள்ளியை பிள்ளை ஏழாம் ஆண்டு இரண்டாம் தவணைப் பரீட்சையில் பெறவில்லை என்பதாகும்
அதன்பிறகு ஆசிரியர் தன் கணவருடன் அவர்கள் வீட்டுக்கு சென்று அப்பாவுக்கு உளவள ஆலோசனையை வழங்கியதுடன் பிள்ளையை தமது வீட்டில் வந்திருந்து படிக்கும்படியும் வலியுறுத்தியுள்ளார்
அயல் வீட்டில குளறிக்கேட்டால் அது அவர்கள் குடும்ப பிரச்சனை என்று விட்டுவிடாமல்
தன்னால் இயன்ற முயற்சியை எடுத்து அந்த சிறுவனைக் காப்பாற்றியுள்ளார் அந்த சமூகப்பொறுப்புடையஆசிரியை





