Home புதினங்களின் சங்கமம் யாழில் கள்ளு தவறணையில் நடந்த கொலை! குற்றவாளிக்கு மரணதண்டனை!

யாழில் கள்ளு தவறணையில் நடந்த கொலை! குற்றவாளிக்கு மரணதண்டனை!

யாழ்ப்பாணம், – ஊர்காவற்றுறை, நாரந்தனைப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு 14 ஆண்டுகளின் பின்னர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்றைய தினம் (30) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி, ஊர்காவற்றுறை நாரந்தனையிலுள்ள கள்ளுத் தவறணையில் இரு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பின் போது, நாரந்தனை தெற்கு, அண்ணா வீதியைச் சேர்ந்த போல் றொபின்சன் ரோனி என்பவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், 2023 ஆம் ஆண்டு மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்தப்பட்டது. Die
மேல் நீதிமன்ற நீதிபதி டி.எஸ். சூசைதாஸ் தலைமையில் இந்தவழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த வேளையில், அவர் இரத்தினபுரி குடியியல் மேல்முறையீட்டு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றலாகிச் சென்றிருந்தார்.

இந்தநிலையிலேயே, குறித்த வழக்கின் தீர்ப்பு நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டதோடு, நீதிபதி டி.எஸ். சூசைதாஸ் வருகை தந்து, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments