Home புதினங்களின் சங்கமம் கனடா டொராண்டோ நகர மண்டபத்தில் கலியாணம் கட்டுபவர்களுக்கான அறிவித்தல்!!

கனடா டொராண்டோ நகர மண்டபத்தில் கலியாணம் கட்டுபவர்களுக்கான அறிவித்தல்!!

Toronto City Hall behind the fountain in Nathan Phillips Square.

கனடாவின் டொராண்டோ நகர மண்டபத்தில் நடைபெற்று வரும் திருமண நிகழ்வுகள், எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளன. நகர மண்டபத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பெரிய அளவிலான கட்டுமான பணிகள் மற்றும் நவீன மயமாக்கல் திட்டங்களே இதற்கு முதன்மைக் காரணம். எனினும், கடந்த 32 ஆண்டுகளாக இங்கு திருமண சேவைகளை வழங்கிவந்த ‘மினிஸ்டீரியல் அசோசியேட்ஸ்’ என்ற தனியார் நிறுவனத்துடன் குத்தகை ஒப்பந்தத்தை எட்டுவதில் ஏற்பட்ட முரண்பாட்டால், இந்த நடவடிக்கை திட்டமிடப்பட்டதை விடவும் முன்னதாகவே அமலுக்கு வருகிறது. குத்தகையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க மாநகராட்சி விடுத்த கோரிக்கையை சேவை வழங்கிய நிறுவனம் நிராகரித்துள்ளது. அதேவேளை, சேவை வழங்கிங் கோரிய நிபந்தனைகளை தாங்களால் பூர்த்தி செய்ய முடியாது என்பதால், ஜனவரி 1 முதல் 3 ஆம் தளத்தில் உள்ள மண்டபத்தில் திருமணங்களை நிறுத்த மாநகராட்சி தீர்மானித்துள்ளது. இந்த மாற்றத்தால் முன்பதிவுகள் பாதிக்கப்படும் தம்பதிகளுக்கு பழைய நகர மண்டபம் மற்றும் சென் லாரன்ஸ் மார்க்கெட் போன்ற மாற்று இடங்களை அடையாளம் காண உதவுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments