Home புதினங்களின் சங்கமம் “முன்பள்ளி சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; சந்தேக நபரை பாதுகாக்கும் கல்லூரி நிர்வாகம்”

“முன்பள்ளி சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; சந்தேக நபரை பாதுகாக்கும் கல்லூரி நிர்வாகம்”

கொழும்பு, தெஹிவளையில் அமைந்துள்ள பிரசித்த கல்லூரியொன்றின் முன்பள்ளியில், நான்கு வயது சிறுமி ஒருவர் அங்கு பணியாற்றிய பராமரிப்பாளரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த செப்டெம்பர் 16ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், சிறுமி முன்பள்ளியில் இணைந்த மூன்றாவது நாளில் நிகழ்ந்துள்ளது.

சிறுமி சம்பவம் குறித்து ஆசிரியரிடம் தெரிவித்தபோதும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனப் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையிடம் சிறுமி வழங்கிய ஆரம்ப வாக்குமூலத்தை மாற்றுவதற்கு ஆசிரியர் முயற்சித்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தை உரிய அதிகாரிகளிடம் கொண்டு செல்வதற்கு பதிலாக, கல்லூரி நிர்வாகம் குற்றஞ்சாட்டப்பட்ட பராமரிப்பாளரைப் பாதுகாக்க முயற்சித்ததாகவும் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சிறுமியின் தாயார் குழந்தை உளவியலாளராகப் பணியாற்றுவதுடன், தனது மகளுக்கு ஏற்கெனவே ‘நல்ல தொடுதல், தவறான தொடுதல்’ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தார். இதன் காரணமாகவே சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments