Home புதினங்களின் சங்கமம் இன்னும் 24 மணி நேரங்கள் இலங்கை முழுவதும் மின்தடையா? அமைச்சர் கூறுவது என்ன?

இன்னும் 24 மணி நேரங்கள் இலங்கை முழுவதும் மின்தடையா? அமைச்சர் கூறுவது என்ன?

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள திடீர் மின் தடை காரணமாக, நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களும் முற்றாக செயலிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று (17) காலை திடீரென ஏற்பட்ட தேசிய மின் கட்டமைப்புத் தடையைத் தொடர்ந்து இந்த அவசர நிலை உருவாகியுள்ளது.

இதனால் நாட்டின் பல பகுதிகளிலும் மின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மின்சாரக் கட்டமைப்பை இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் பணிகளைத் துரிதப்படுத்த சம்பந்தப்பட்ட தரப்பினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே வேளை

நாட்டின் பல பகுதிகளில் இன்று (17) காலை முதல் திடீர் மின்வெட்டு ஏற்பட்டுள்ள நிலையில், மின் விநியோகத்தை மிக விரைவில் படிப்படியாக இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார்.

இந்த மின் தடைக்கான பிரதான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

எனினும், நேற்று (16) கொத்மலை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதன் செயற்பாடுகள் தடைப்பட்டமை இந்த மின் சமநிலையின்மைக்குக் காரணமாக அமைந்ததா என்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மின்சாரக் கட்டமைப்பை விரைவில் இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், கூரைகளில் சூரிய மின் படலங்களை (Rooftop Solar) பயன்படுத்தும் அனைத்து நுகர்வோரும் உடனடியாக அவற்றை துண்டிக்குமாறு (Switch Off) அமைச்சர் விசேட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதே வேளை கொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகளுக்கு மின் விநியோகம் சீர் செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments