பல்வேறு குற்றச் செயல்களுக்காக அடிக்கடி சிறைக்குச் செல்லும் டில்லு என்ற டில்லு என்ற போதைப்பொருள் முகவரான இந்த காவாலி கடந்த சில நாட்களுக்கு முன்னும் சிறைக்குள் அடைக்ககப்பட்டு தற்போது பிணையில் வெளியே வந்துள்ளான். வந்த பின்னர் தனது போதைப்பொருள் பாவிக்கும் காவாலிகளுடன் காரிலும் மோட்டார் சைக்கிள்களிலும் யாழில் ஊர்வலமாக வலம்வந்த காட்சிகள் யாழ்ப்பாணத்தில் NPP அரசாங்கத்தின் சட்டம் ஒழுங்கு சரியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றதா? என்ற கேள்விகள் பொதுமக்களிடையே உருவாகியுள்ளது.
தென்னிலங்கையில் போதைப்பொருள் மாபியாக்களை குறி வைத்து நடவடிக்கை எடுத்துவரும் NPP அரசாங்கம் தமிழர் பிரதேசங்களை நாசமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கண்டும் காணாமலும் விட்டுள்ளதுடன் குறித்த செயற்பாடுகளில் ஈடுபடுவோரிடம் நெருக்கமான உறவுகளையும் பேணிவருவதாக சந்தேகம் எழுந்துள்ளது.





