திருகோணமலை மாவிலாறு காட்டுப்பகுதியில் காட்டு யானை தாக்கியதில், நான்கு பிள்ளைகளின் தந்தையான இராசரத்தினம் நாகேந்திரம் உயிரிழந்துள்ளார்.
ஈச்சிலம்பற்று பூநகர் கிராமத்தைச் சேர்ந்த இவர், மாவிலாறு காட்டுப்பகுதியில் மாடுகளைப் பார்த்துக்கொண்டிருந்தபோது யானையின் தாக்குதலுக்கு இலக்காகிப் படுகாயமடைந்துள்ளார். வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
நான்கு பிள்ளைகளின் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.காட்டு யானைகளின் தாக்குதல்களிலிருந்து மக்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். காட்டு யானைகள் நடமாடும் பகுதிகளில் செல்லும்போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுங்கள்.




