Home புதினங்களின் சங்கமம் A9 புளியங்குளத்தில் கோர விபத்து! தந்தையும் குழந்தையும் பலி… தாய் படுகாயம்!

A9 புளியங்குளத்தில் கோர விபத்து! தந்தையும் குழந்தையும் பலி… தாய் படுகாயம்!

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா, ஆனந்தர் புளியங்குளம் பகுதிக்கு நெல் விதைப்புப் பணிக்காக அதிகாலை மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பம் கோர விபத்தில் சிக்கியுள்ளது.

வவுனியா, ஏ9 வீதி, புளியங்குளம் புதூர் சந்திக்கு அண்மையில்மோட்டார் சைக்கிளில் தந்தை, தாய் மற்றும் ஒரு வயது நிரம்பாத குழந்தை உள்ளிட்டோர் பயணித்துள்ளனர். இதன்போது முன்னால் சென்ற வாகனமொன்றை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த வாகனத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் படுகாயமடைந்த குடும்பத்தினர் புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், தந்தையும் பச்சிளம் குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்த தாய் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments