Home புதினங்களின் சங்கமம் கொழும்பில் கலியாண வீட்டில் குடித்து கும்மாளம்!! நிறை வெறியில் கள்ளக்காதலியின் வீட்டில் சிக்கிய குடும்பஸ்தர்!!

கொழும்பில் கலியாண வீட்டில் குடித்து கும்மாளம்!! நிறை வெறியில் கள்ளக்காதலியின் வீட்டில் சிக்கிய குடும்பஸ்தர்!!

கொழும்பை அண்மித்த பகுதியில் திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்ட நபர் ஒருவர், மதுபோதையில் தனது வீட்டுக்குச் செல்லும் வழியை மறந்து, கள்ளக் காதலியின் வீட்டுக்குச் சென்ற சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

மது போதை
குறித்த நபர் தனது நிறுவனத்தில் பணிபுரியும் நண்பரின் மகளுடைய திருமண நிகழ்வில் கலந்துகொண்டதுடன், நண்பர்களுடன் இணைந்து அதிகளவில் மது அருந்தியுள்ளார்.

பின்னர் திருமண நிகழ்வில் நடைபெற்ற நடனத்திலும் கலந்துகொண்டு, அங்கிருந்தவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து நண்பர்கள் அவரை நிகழ்விலிருந்து வெளியே அழைத்து வந்து, முச்சக்கர வண்டியொன்றில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அத்துடன், அவரது மனைவிக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட நண்பர் ஒருவர், கணவரின் நிலைமை குறித்து தெரிவித்ததுடன், அவரை முச்சக்கர வண்டியில் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

எனினும், சுமார் அரை மணி நேரமாகியும் கணவர் வீடு திரும்பாததால் மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன்போது, தனது கணவர் அடிக்கடி சென்று வரும் வீடொன்று தொடர்பில் ஏற்கனவே தகவல் அறிந்திருந்த மனைவி, முச்சக்கர வண்டியில் அந்த வீட்டைத் தேடிச் சென்றுள்ளார்.

அங்கு சென்றபோது, வீட்டின் முன்பாக தனது கணவர் நிற்பதைக் கண்டுள்ளார். அவர் அருகில் சென்றதும், வீட்டின் கதவு திறக்கப்பட்டு பெண்ணொருவர் வெளியே வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது மனைவி, “இவள் தானா அது?” எனக் கேட்டதாகவும், அந்தக் கேள்வியைக் கேட்டவுடன் கணவரின் போதை தெளிந்ததாகவும் கூறப்படுகிறது. நிலைமையை சமாளிக்க முயன்ற கணவர், “நான் வீட்டுக்குச் செல்லும் பாதையைச் சற்றுத் தவறிவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.

அதற்கு மனைவி, “வீட்டுக்குச் செல்லும் பாதைதான் தவறிவிட்டது; இந்த வீட்டுக்கு வரும் பாதை மட்டும் நன்றாக நினைவில் இருக்கிறதே” எனக் கூறி, கணவரின் சட்டைக் காலரைப் பிடித்து முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்றுள்ளார்.

பின்னர் கணவரை வீட்டின் முன்பாக இறக்கிவிட்டு கதவை மூடியுள்ளார். இதனால், குறித்த நபர் தனது சொந்த வீட்டின் படிக்கட்டுக்கு அருகிலேயே இரவைக் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments