யாழ்ப்பாணத்தில் உள்ள கோவில் ஒன்றில் குருக்களாக இருக்கும் 24 வயது இளைஞன் மீது, அப்பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்குக் காதல் ஏற்பட்டுள்ளது. குறித்த கோவில் குருக்கள் யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வருகின்றார். அத்துடன், தனது தந்தை குருக்களாக உள்ள கோவிலில் மாலை நேரப் பூசையைப் பல்கலைக்கழக மாணவரான இக்குருக்களே செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கோவிலுக்கு அடிக்கடி வரும் 15 வயதான மாணவி, குருக்களின் மகனுடன் வம்புக்கு இழுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சிறுவயது முதலே அம்மாணவி இவ்வாறு நடந்து கொண்டதால், குருக்களின் மகன் அதைப் பொருட்படுத்தவில்லை.
இவ்வாறான நிலையில், குருக்களின் மகன் கோவிலில் தனியாக நின்ற போது, அம்மாணவி நேரடியாகச் சென்று தனது காதலைக் கூறியதாகத் தெரிகிறது. ஆரம்பத்தில் அதை விளையாட்டாகக் கூறுவதாக நினைத்த குருக்களின் மகன், அதன் பின்னர் தனது வாட்ஸ்அப் (WhatsApp) எண்ணிற்கு அம்மாணவி தொடர்ச்சியாகத் தொடர்புகொண்டு பேச முற்பட்டபோதே, அவரது தீவிரத்தை உணர்ந்துள்ளார். மாணவியிடம் இது தொடர்பாக கடுமையா எச்சரித்தும் மாணவி அதைப் பொருட்படுத்தாது செயற்பட்டுள்ளாள்.
இதனையடுத்து, கோவில் நிர்வாகத்தில் உறுப்பினராக உள்ள மாணவியின் பேரனிடம் இவ்விடயத்தைக் கூறியுள்ளார். ஆனால், மாணவியின் பேரன் “இதற்குக் காரணம் நீதான்” எனக் கூறி, குருக்களின் மகனுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன், கோவில் குருக்களிடமும் தர்க்கத்தில் ஈடுபட்டு, நிர்வாகத்திடம் முறையிட்டு அக்கோவிலில் இருந்து குருக்களையும் அவரது மகனையும் அகற்ற முற்பட்டுள்ளார்.
இதனையடுத்து, கோவில் நிர்வாகம் மற்றும் கோவில் பக்தர்கள் மேற்கொண்ட விசாரணைகளின் போது, 13 வயது மாணவியே சிறுபிள்ளைத்தனமான செயற்பாட்டைச் செய்துள்ளார் என்பது ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இருப்பினும், தற்போதும் அம்மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும்; மாணவி தொடர்பாகக் குருக்களின் மகன் ஆரம்பத்திலேயே தமக்குச் சுட்டிக்காட்டாமல், ஆதாரங்களைச் சேகரித்து வைத்திருந்து ஏனையவர்களுக்கு சுட்டிக்காட்டியது மாணவியைத் திட்டமிட்டுத் தவறான நபராகக் காட்ட முற்பட்ட செயலாகும் எனக் கூறி அவர்கள் மீண்டும் சண்டைக்குச் செல்ல முற்பட்டுள்ளதாகவும், கோவிலில் இருந்து அவர்களை அகற்ற முயன்று வருவதாகவும் அப்பகுதித் தகவல்கள் தெரிவிக்கின்றன.





