வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெரியதம்பனை பகுதியைச் சேர்ந்த அருளப்பன் அருள்ராஜ் எனும் இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற பேருந்தும், அதே திசையில் பயணித்த துவிச்சக்கர வண்டியும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்து தொடர்பாக பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





