தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்டன் தோட்டத்தில் வசித்து வந்த கிறிஸ்தவ மதகுரு ஒருவர் இடி தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில், மின்னல் தாக்கிய இடத்திலேயே குறித்த நபர் உயிரிழந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
பின்னர், உயிரிழந்தவரின் சடலம் லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்





