Home புதினங்களின் சங்கமம் முறுகண்டிப் பிள்ளையார் கோவிலில் பிச்சைக்காரி தலைமையில் புலம் பெயர் தமிழர்களை குறி வைத்து நடக்கும் செப்படி...

முறுகண்டிப் பிள்ளையார் கோவிலில் பிச்சைக்காரி தலைமையில் புலம் பெயர் தமிழர்களை குறி வைத்து நடக்கும் செப்படி வித்தை!!

இது  சமூகவலைத்தளத்தில் வந்த பதிவாகும்…

யாழ்-கொழும்பு செல்லும் வழியில் திருமுறிகண்டியில் நின்று செல்வது வழமை. அங்கு சென்றவர்கள் நிச்சயம் இந்த பிச்சைக்காரியை சந்தித்திருப்பார்கள். ஒரு 60 வயது மதிக்கத்தக்க இந்த பிச்சைக்காரியின் இலக்கு, புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து விடுமுறையில் ஊருக்கு வரும் நபர்கள் ஆவார்கள். அவர்களின் உடை, நடை என்பவற்றை வைத்து இணங்கண்டுகொள்ளும் இப் பிச்சைப் பெண், அவர்களிடம் சென்று பரிதாபமாக பேசி பணத்தை கறந்துவிடுவார்.
இவர் சும்மா 100 – 200 க்கு பிச்சை எடுப்பவர் அல்ல. இவரின் இலக்கு ஆயிரங்கள். தான் வறுமையில் இருப்பதாகவும், ஒரு பத்தாயிரம் இருந்தால் கோழி வளர்த்து வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியும் என்பதே இவர் பலரிடம் கூறும் காரணமாகும். நம்மவர்கள் பலரும் இவளிடம் பணம் கொடுத்து ஏமாந்துள்ளார்கள்.
இவள் தனி ஆள் இல்லை. இவள் பிரபல வட்டி வியாபாரி. நாள் வட்டி மணித்தியால வட்டி என பணத்தை விட்டு சமாதிப்பவர் ஆவார். இவரின் கீழ் இயங்கும் ஓர் காடைக் கும்பலும் உள்ளது. இதனால் அவ் ஊர் மக்கள் இவரிடம் வம்பு வைத்துக்கொள்வது இல்லை.
நீங்கள் ஊருக்கு செல்லும் போது இப் பெண்ணிடம் ஏமாறாமல் இருப்பதற்காகவே இது பகிரப்படுகிறது.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments