திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் ஈச்சிலம்பற்று பகுதியில் இன்று (17) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்று சீமெந்து லொறியுடன் மோதியதில், தோப்பூர் – செல்வநகர் பகுதியைச் சேர்ந்த 33 வயதான அன்சார் அல்ஹாம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த 26 வயதான சித்திக் சாபி படுகாயமடைந்து ஈச்சிலம்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் ஜனாஸா பிரேத பரிசோதனைக்காக கந்தளாய் பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்




