Home புதினங்களின் சங்கமம் தெஹிவளையில் வீடு ஒன்றின் மீது குண்டுத் தாக்குதல், 10 மற்றும் 14 வயதுடைய இரு...

தெஹிவளையில் வீடு ஒன்றின் மீது குண்டுத் தாக்குதல், 10 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழப்பு!

தெஹிவளை, கௌடான , சிரிசங்கபோ வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது வீசப்பட்ட குண்டுத் தாக்குதலில், 10 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்ததுடன், அவர்களது 52 வயதுடைய தந்தை காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (11) அதிகாலை இக்கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான தாக்குதலுக்கான காரணம் அல்லது சந்தேகநபர்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments