இங்கிலாந்து ஆசிரியையின் சர்ச்சை வழக்கு நீதிமன்ற விசாரணை விவரங்கள்
பிரித்தானியாவில் உடற்கல்வி ஆசிரியையாகப் பணியாற்றிய பெண் ஒருவர், தனது 16 வயது மாணவருடன் தவறான உறவில் ஈடுபட்டதாகத் தொடுக்கப்பட்ட வழக்குத் தொடர்பான விவரங்கள் நீதிமன்ற விசாரணையின் போது வெளிவந்துள்ளன.
இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் உள்ள பிட்டர்ன் பார்க் பள்ளியில் பணியாற்றிய 30 வயதான புரோன்வென் ஜேம்ஸ் என்ற ஆசிரியையே இந்தக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.
வழக்கு விசாரணையின் போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் எட்வர்ட் கல்வர் தாக்கல் செய்த விவரங்கள்….
மாணவனின் ‘Snapchat’ கோரிக்கையை ஆசிரியை முதலில் நிராகரித்த போதிலும், பின்னர் ஏற்றுக்கொண்டு அவருடன் தொடர்ந்து உரையாடி வந்துள்ளார்.
இந்த இணையவழித் தொடர்புகள் நாளடைவில் நெருக்கமடைந்து, இருவரும் வகுப்பறைக்கு வெளியே காரிலும் ஆ**சிரியையின் வீட்டிலும் தனியாகச் சந்தித்துக் கொள்ள வழிவகுத்துள்ளது.
ஆசிரியையின் வீட்டிற்கு மாணவன் சென்றிருந்த போது, இருவரும் தொலைக்காட்சியில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் பாலியல் உறவில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தனியாக இருக்கும்போது தன்னை மிஸ் என்று அழைக்குமாறு ஆசிரியை அம்மாணவனிடம் கூறியதாகவும், இருவரும் சேர்ந்து வேறு இடத்திற்குச் சென்று வாழலாம் என ஆசிரியை கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவன் பொலிஸில் அளித்த வாக்குமூலத்தில், ஆரம்பத்தில் இது எனக்குப் பெருமையாகத் தோன்றினாலும், பின்னரே நான் ஏமாற்றப்பட்டுப் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளேன் என்பதை உணர்ந்தேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியை புரோன்வென் ஜேம்ஸ் தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் முற்றிலும் மறுத்துள்ளார். மாணவன் தன் வீட்டிற்கு வரவில்லை என்றும், வேறொரு நபரின் தூண்டுதலினாலே தன் மீது இத்தகைய பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் வின்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. அதிகாரம் மற்றும் நம்பிக்கைத் துரோகம் இழைத்தமைக்காக அவர் மீது குழந்தைகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடர்கிறது.





