Home புதினங்களின் சங்கமம் திருமண நிகழ்வுக்காக புலம்பெயர் நாட்டிலிருந்து இலங்கை வந்த குடும்பம் மகனை இழந்தது!

திருமண நிகழ்வுக்காக புலம்பெயர் நாட்டிலிருந்து இலங்கை வந்த குடும்பம் மகனை இழந்தது!

குவைத்தில் இருந்து உறவினர் வீட்டு திருமண நிகழ்வுக்காக இலங்கைக்கு வந்த குடும்பம் ஆசை மகனை இழந்த சோகம்

அடுத்த வாரம் மீண்டும் குவைத் திரும்பத் தயாராகி கொண்டிருந்த நிலையில் பெரிய சோகம்

வெலிகம பிரதேசத்தில்….

நான்கு வயது சிறுவன் ….

பிளாஸ்டிக் போத்தல் மற்றும் வலை பயன்படுத்தி மீன் பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது…

சிறுவன் , எதிர்பாராத விதமாக ஆற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளார்.

சிறுவனைக் காணவில்லை என பெற்றோர் மற்றும் உறவினர்கள் பதற்றத்துடன் தேடிய நிலையில், பின்னர் ஆற்றில் கண்டு பிடிக்கப்பட்டார்.

உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதிலும், சிறுவனை காப்பாற்ற முடியவில்லை.

இச்சம்பவம், உறவினர்கள் மற்றும் வெலிகம பிரதேச மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தைகள் தண்ணீர் நிலைகளுக்கு அருகில் செல்லும்போது பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது.

ஒரு சில நொடிகளின் கவன குறைவுகூட ஒரு குடும்பத்தின் வாழ்நாளையே மாற்றி விட கூடும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments