யாழ் சிறுப்பிட்டிப் பகுதியில் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் கடை ஒன்றில் பொருட்கள் வாங்குவது போல் நடித்து அங்கு நின்ற பெண்ணின் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடியவன் பெரும் பொம்பிளைக் கள்ளன் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவன் சங்கிலி அறுத்து பிடிபட்ட புகைப்படம் வெளியாகிய பின்னர் இவனிடம் ஏமாந்த சில மாணவிகளின் பெற்றோர் இது தொடர்பாக வம்பனிற்கு பல தகவல்களை வழங்கியுள்ளனர்.
பெற்றோர்களின் கைத் தொலைபேசியில் ன்லைன் வகுப்புச் செயற்பாடுகளில் ஈடுபடும் மாணவிகளின் வட்சப் குறுாப் போன்றவற்றுக்குள் இவன் ஊடுருவி கொழும்பில் பிரபல நிறுவனம் ஒன்றில் கணனி இஞ்சினியராக பணியாற்றுவதாக கூறி அவர்களின் கற்றல் நடவடிக்கைகளில் உதவி செய்வது போல் செய்து அவர்களுடன் தனிப்பட்ட ரீதியில் வட்சப்பில் தொடர்பு கொண்டு காதல் வலை வீசியுள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றார்கள். இதே உருவத்துடன் கூடிய நபரே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டதாகத் தெரியவருகின்றது.
அலுவலகங்களில் தொழில் புரியும் பெற்றோர் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் பெற்றோர்களின் பெண் பிள்ளைகளைக் குறி வைத்தே இவன் இயங்கியுள்ளான். இவனுடன் தொடர்புபட்ட மாணவிகள் தங்கள் வீடுகளில் பெற்றோர் இல்லாத வேளைகளில் இவனை அழைத்து உல்லாசமாக இருந்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவனது செயற்பாடு தொடர்பாக அறிந்தும் அவமானம் காரணமாக பெற்றோர்கள் பொலிசாரிடம் முறையிடவில்லை எனத் தெரியவருகின்றது.
சில மாணவிகளுக்கு இவன் நவீன தொலைபேசிகள் வாங்கிக் கொடுத்து இரகசியமாக தொடர்புகளைப் பேணி உள்ளதும் இனிப்பு வகைகள் மற்றும் அழகுசாதனப்பொருட்கள் வாங்கிக் கொடுத்து சில மாணவிகளை மட க்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ன. ஆகவே இந்த கொள்ளையன் பிடிபட்டால் இது தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்புக்கள் தெரிவித்துள்ளன.





