ஏ9 வீதியில் யாழ் போதனா வைத்தியசாலை வாகனம் விபத்து!
யாழ். போதனா வைத்தியசாலை மருந்துகளை ஏற்றிச் சென்ற வாகனம் கொக்காவில் பகுதியில் பாதையை விலகி சரிந்தது.
இன்று அதிகாலை சுமார் 2.00 மணியளவில், யாழ். போதனா வைத்தியசாலைக்கான மருந்துகளை ஏற்றிச் சென்ற வைத்தியசாலை வாகனம் கொக்காவில் பகுதியில் பழுதடைந்துள்ளது.
வாகனத்தில் இருந்த மருந்துகளை பாதுகாப்பாக இறக்கி, மற்றுமொரு வாகனத்திற்கு மாற்றி எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
வாகனத்தின் சாரதி மற்றும் உடன் பயணித்த இரு ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ளதாக அறியவருகின்றது.

