பலாங்கொடையில் அதிர்ச்சி சம்பவம் – காணாமல் போன 17 வயது மாணவி கல்குவாரியிலிருந்து சடலமாக மீட்பு.!
பலாங்கொடை – மஹவலதென்ன, கஜுவத்த பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் இருந்து மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்டவர் பலங்கொடை, மஹவலதென்ன பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமி என தெரிவிக்கப்படுகிறது.
இச்சிறுமி கடந்த 23 ஆம் திகதி முதல் வீட்டிலிருந்து காணாமல் போயிருந்த நிலையில், இது தொடர்பாக அவரது தந்தையினால் #பலங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டிருந்தது.
எனினும், இது கொலையா, தற்கொலையா அல்லது நீரில் மூழ்கி ஏற்பட்ட மரணமா என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (25) பலங்கொடை வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
சம்பவம் தொடர்பில் பலங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

