கனடாவில் வாழும் ஈழத் தமிழ் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு!
கனடா தமிழ் அமைப்பு ஒன்றி்ன் சமூகவலைத்தளத்தில் வந்த தகவலை அப்படியே தந்துள்ளோம்.
கனடாவில் இயங்கும் சினிமா நடனக் குழுக்களின் சமூக ஊடக மோகத்திற்கும், ஈழத்து சிறார்களின் எதிர்காலத்திற்கும் எதிரான கண்டனம்!
கனடாவில் நமது ஈழத்துச் சிறார்களுக்குச் சினிமா நடனம் கற்றுக்கொடுக்கும் சில நடனக் குழுக்கள், தங்களின் வருமானத்திற்காகவும் சமூக வலைத்தளங்களில் (WhatsApp, Instagram, TikTok, Facebook) ‘ரீல்ஸ்’ (Reels) மோகத்திற்காகவும் நமது வருங்காலச் சந்ததியினரைப் பயன்படுத்தி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

