புதினங்களின் சங்கமம்

ஐஸ் போதைப்பொருள் விற்பனை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை – மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பு !

5 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து, விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த நபர் ஒருவருக்கு மன்னார் மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திகதி, 5 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழும், அதனை விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழும் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கே மன்னார் மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

குறித்த வழக்கின் விசாரணைகள் மன்னார் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில், குற்றவாளிக்கு எதிரான சாட்சியங்களையும் சான்றுகளையும் அரச சட்டவாதிகளான தேவ விதுரன் மற்றும் ஆறுமுகம் தனுஷன் ஆகியோர் நேர்த்தியாகவும் வலுவாகவும் நெறிப்படுத்தி நீதிமன்றத்தின் முன் சமர்ப்பித்திருந்தனர்.

இதேநேரம் அரசு தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும், குற்றவாளியின் மீதான குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதாக அமைந்திருந்தன.

இவ்வழக்கின் அனைத்துப் பரிமாணங்களையும், சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகளையும் மிக ஆழமாக ஆராய்ந்த மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, குற்றச்சாட்டுகள் அனைத்தும் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்தார் நீதிபதி, கடந்த 01.07.2026 அன்று குறித்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x