புதினங்களின் சங்கமம்

தாங்க முடியாத அந்த வலி! யாழில் ரயில் முன் பாய்ந்து பிரபாகரன் பலி!

யாழில் நோயின் வீரியம் தாங்க முடியாத இளம் குடும்பஸ்தர் ஒருவர் ரயிலில் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார்.

கொழும்புத்துறையைச் சேர்ந்த தங்கவடிவேலு பிரபாகரன் (வயது-42) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்டகாலமாகச் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் நோயின் வீரியம் தாங்க முடியாமல், யாழ்.கச்சேரிக்கு முன்பாக உள்ள ரயில் கடவைக்குச் சென்று, அநுராதபுரத்தில் இருந்து வந்த யாழ்ராணி முன் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார்.

பின்னர் அவரது சடலமானது எடுத்துச் செல்லப்பட்டு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x