வவுனியாவில் பல்கலைக்கழக மாணவன் ரயிலில் பாய முற்பட்டார்!! காதலி அவுஸ்ரேலியா அங்கிளை கை பிடிக்கின்றார்!!
யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீட மாணவன் ஒருவன் வவுனியாவில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்பட்டுள்ளார். ரயிலில் பாய முற்பட்டு ஆயத்தமான வேளையில் அங்கு நின்றவர்களால் பிடிக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது. குறித்த மாணவன் பன்றிக்கெய்தகுளம் பகுதியில் ரயில் பாதைக்கு அருகில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடுவதை அவதானித்து வந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், மாணவன் ரயில் வருவதை அவதானித்து தான் கொண்டு வந்திருந்த பயணப்பை மற்றும் கைத்தொலைபேசி போன்றவற்றை சற்றுத் தொலைவில் வைத்துவிட்டு தண்டவாளத்திற்கு அருகில் நிற்பதை அவதானித்து விரைந்து சென்று மாணவனை பிடித்துள்ளார்கள்.
அதன் பின்னர் மேற்கொண்ட விசாரணையின் போதே காதலித்து வந்த மாணவி தன்னை கைவிட்டுவிட்டு அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த பொறியியலாளரை திருமணம் செய்யவுள்ளதாக கூறியுள்ளார். குறித்த காதலி கிளிநொச்சி பல்கலைக்கழகத்தில் மாணவனுடன் ஒரே துறையில் கற்று வந்தவர் என தெரியவருகின்றது.
தன்னை தனது காதலி ஏமாற்றியமை தொடர்பாக தான் முரண்பட்ட போது காதலி மற்றும் அவளது பெற்றோர் உறவுகள் தன்னை பொலிசாரிடம் மாட்டி வைத்து பொலிசாரால் தனக்கு கடும் அ்ச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் மாணவன் தெரிவித்துள்ளார். இரு தடவைகள் பொலிஸ் நிலைய சிறைக்கூண்டுக்குள் தான் சிறை வைக்கப்பட்டதாகவும் அவன் தெரிவித்துள்ளான்.
குறித்த மாணவனின் நிலையை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மாணவனை அவனது பெற்றோரை வரவழைத்து ஒப்படைத்துள்ளார்கள்.

