யாழில் டிக்டொக்கில் பெண்களை கவர்ந்திழுத்து கேவலம் செய்யும் நகை கடை பச்சைக் கள்ள முதலாளி!
யாழ் கஸ்துாரியார் வீதியில் இலக்கம் 7ல் உள்ள மயூரன்ஸ் நகை மாளிகை தொடர்பாக ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். குறித்த நகைக்கடை முதலாளி பச்சைக் கள்ளன் என்றும் அவன் பொலிஸ் உயரதிகாரி ஒருவர் மற்றும் யாழ் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சில பொலிஸ்காரர்களை தனது கையாட்களாக வைத்துக் கொண்டு மிகப் பெரும் ஏமாற்று வேலையை செய்து கொண்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்பாவிகளை ஏமாற்றி பல கோடிரூபா மோசடி செய்துள்ளதுடன் 22 கரட் நகைகளுக்கு பதிலாக 16 கரட் 18 கரட் நகைகளை செய்து கொடுத்தும் முற்பணமாக வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்ற பணத்தை மீற்றர் வட்டிக்கு கொடுத்துவிட்டு வாடிக்கையாளர்களை மாதக்கணக்கில் நகையைச் செய்து கொடுக்காது ஏமாற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.அவனால் செய்து கொடுக்கப்பட்ட நகைகளை வங்கியில் அடகு வைக்கக்கூட முடியாதவாறு 15 கரட் உள்ள நகைகளாக காணப்படுவதாக வாடிக்கையாளர்கள் பலர் கூறுகின்றார்கள். இது தொடர்பாக பொலிசார் மற்றும் உயரதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இது தொடர்பாக சமூகவலைத்தளத்தில் வெளியாகிய பதிவினை அப்படியே தந்துள்ளோம். ஏற்கனவே நாம் வெளியிட்ட பதிவின் கீழ் உள்ளது.
யாழ். நகை மாளிகை ஒன்றில்
பெண்கள் ஏமாற்றப்படுகின்றனர்
-நடவடிக்கை எடுப்பது யார் என கேள்வி-
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் இயங்கும் மயூரன்ஸ் நகை மாளிகைக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் அலைக்கழிக்கப்படுவதுடன் மரியாதைக்குறைவாக நடத்தப்படும் சம்பவங்கள் தொடர்பில் இதற்கு பொறுப்பான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், இந்த நகைக்கடை உரிமையாளரும் பணியாளர்களும் மிகச்சிறந்த ஏமாற்று வித்தைக்காரர்கள் என தெரிவிக்கின்ற பாதிக்கப்பட்ட நபர்கள், குறித்த நகை மாளிகைக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் குறிப்பாக பெண்கள் மிக அவதானமாக இருக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
குறித்த நகை மாளிகையினர் இவ்வாறு ஏமாற்றுவதால் பெண்கள் விரக்தியடைந்து தவறான முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளப்படக்கூடிய ஆபத்துக்கள் உள்ளன எனவும் தெரியவருகின்றது.
குறித்த நகை மாளிகையினர் ரிக்ரொக் சமூக வலைத்தளத்தில் நவீன டிசைன்களில் நகைகளைக் காட்சிப்படுத்தி பெண்கள் கவர்ந்திழுக்கப்படுகின்றனர் எனவும் இதை நம்பி கடைக்குச் செல்லும் பெண்கள் அலைக்கழிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் எனவும் பாதிக்கப்பட்டோர் குற்றம் சாட்டுகின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். நகர் கஸ்தூரியார் வீதியில் உள்ள மயூரன்ஸ் நகை மாளிகையின் பெயரில் நடத்தப்படும் ரிக்ரொக் இல் நவீன டிசைன் நகைகளின் காணொளிகள் காட்சிப்படுத்துப்படுகின்றன. நாம் அதைப் பார்த்து புதிய நகைகளைக் கொள்வனவு செய்யும் ஆர்வத்துடன் நகைக்கடைக்கு சென்றால் கடை உரிமையாளரும் பணியாளர்களும் இன்முகத்துடன் வரவேற்கின்றனர். ஆனால், நாம் எதிர்பார்த்துச் செல்லும் டிசைன்களில் நகைகள் கடையில் இருப்பதில்லை. மாறாக கடை உரிமையாளரின் கைத்தொலைபேசியிலேயே அவை இருக்கின்றன.
அவர் கைத்தொலைபேசியில் காண்பிக்கும் புதிய டிசைன் நகைகளில் எமக்கு பிடித்ததைத் தெரிவுசெய்யும்போது மூன்றில் இரண்டு பகுதி பணத்தை முற்பணமாக பெறுகின்றனர். நான்கு அல்லது ஐந்து நாள்களுக்குள் வந்து நகையைப் பெற்றுக்கொள்ளுமாறு வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அதன் பின்னரே அவர்களின் ஏமாற்று வித்தை ஆரம்பமாகின்றது. அவர்கள் கூறிய தினத்தில் எவருக்குமே நகையை தரவில்லை. அவர்கள் குறிப்பிட்;ட தினத்தில் அங்கு சென்றால் தொடர்ந்தும் தவணைகள் இட்டு;க்கொண்டே இருக்கின்றனர். நாம் திருப்பி கதைத்தால் கடும்தொனியில் அச்சுறுத்துகின்றனர் என பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் எமக்கு நகை வேண்டாம் பணத்தை திருப்பித் தாருங்கள் எனக் கேட்டாலும் அதை திருப்பித்தர முடியாது என மிரட்டுகின்றனர். நகை விபரம் தொடர்பாக தெலைபேசி அழைப்பை ஏற்படுத்தினாலும் பதில் அளிப்பதில்லை எனவும் மேற்படி பாதிக்கப்பட்ட தரப்பு கூறுகின்றது.
பெண்ணொருவர் தமது குழந்தைக்கு சங்கிலி ஒன்றை செய்வதற்காக லட்சக்கணக்கான ரூபா முற்பணமாக செலுத்தினார் எனவும் பல மாதங்களாக அலைந்தும் தமக்கு நகை கிடைக்கவில்லை எனவும் தாம் தொடர்ந்து அலைந்த திரிந்து கடும் ஏமாற்றம் மன உளைச்சலுக்குள் உள்ளாகினார் எனவும் கூறுகின்றார். பல மாதங்களின் பின்னர் ஒரு தடவை வேறொரு தேவையின் நிமித்தம் யாழ். நகருக்கு சென்றபோது குறித்த நகைக்கடைக்கு சென்றார் எனவும் அப்போதும் தமது நகை செய்யப்படவில்லை எனவுமு; அதற்கு பதிலாக வேறொ ருநகையை பெற்றுச்சென்றார் எனவும் கூறுகின்றார்.
மேலும், பிறந்தநாள் ஒன்றுக்காக மேற்படி நகை மாளிகையில் மோதிரம் ஓடர் கொடுத்த பெண்ணொருவருக்கு குறித்த தினத்தில் குறித்த டிசைனில் மோதிரம் வழங்கப்படவில்லை எனவும் தொடர் ஏமாற்றத்திற்கு பின்னர் தான் கடை உரிமையாளரால் அச்சுறுத்தப்பட்டார் எனவும் தெரிவித்தார். பின்னர் அவரது உறவினர்கள் நேரில் சென்று தர்க்கத்தில் ஈடுபட்ட பின்னரே தாம் எதிர்பார்த்த டிசைன் இன்றியும் சில மஞ்சாடிகள் குறைவான நிறையிலும் மோதிரம் வழங்கப்பட்டதாகவும் கூறுகின்றோர்.
இதேபோல வவுனியாவில் உள்ள அலுவலகம் ஒன்றில் பணியாற்றும் பெண்;ணொருவர் ரிக்ரொக் இல் பார்த்த தங்கக்காப்பு கொள்வனவுக்காக அங்கு சென்றபோது கடையில் அந்த டிசைன் நகை இல்லை. கைத்தொலைபேசியில் உள்ள டிசைனைக் காண்பித்து அவரிடம் மூன்றரை இலட்சம் ரூபா பணம் பெறப்பட்டுள்ளது. பின்னர் அவரது நகையை செய்து கொடுக்காமல் பல தவணை இடப்பட்டு ஏமாற்றப்பட்டிருக்கின்றார்.
இதனால் மள உளைச்சலுக்கு உள்ளான அப்பெண் பின்னர் தமது குடும்பத்தினரை அழைத்துச் சென்று அதுவும் தாம் எதிர்பார்த்த நகை இன்றி கடையில் இருந்து பழைய டிசைன் நகை ஒன்றைப் பெற்றுச்சென்றார்.
நேற்று இன்று என இல்லாமல் வருடக்கணக்காக இவ்வாறான அலைக்களிப்பும் ஏமாற்றும் தொடர்ந்து வருகின்றது எனவும் இந்த நகை மாளிகைக்கு செல்லும் பெண்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்படவேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

