சுவிஸ்லாந்தைச் சேர்ந்த புலம்பெயர் தமிழன் ஞானேந்திரன் யாழில் மரணம்!
ஊர்காவற்றுறையை பிறப்பிடமாகவும், சுவிற்சர்லாந்தின் பாசல் மாநிலத்தில் வசித்த ஜேம்ஸ் ஞானேந்திரன் யாழ்ப்பாணத்திற்கு வந்து தங்கியிருந்த போது உடுவிலில் உடுவில் பகுதியில் இன்று திடீர் நோய்வாய்ப்பட்ட நிலையில் இன்று காலை (12.04.2026) உயிர்துறந்தார். சுவிற்சர்லாந்தின் முதலாவது தமிழ்ப்பாடசாலையான பிறைபிளட் அக்சியோனின் பாசல் தமிழ்ப் பாடசாலை மற்றும் பாசல் தமிழ் கலைவன் பாடசாலைகளில் தமிழ் கற்பித்த ஆசிரியரும் எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளருமாவார்.


