யாழ் அரச அலுவலகம் ஒன்றில் கடமையாற்றும் 32 வயதான ஜெயபிரகாஸ் என்பவன் பல்கலைக்கழகத்தில் கற்கும் போதே காதலித்து வந்த அவனது காதலியை நடுத்தெருவில் கைவிட்டு விட்டு காதலியின் தங்கையுடன் தலைமறைவாகியுள்ளான்.
தென்மராட்சி சாவகச்சேரிப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட ஜெயபிரகாஸ் 2019ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக இறுதி ஆண்டில் கற்றுக் கொண்டிருந்த போது ஏ.எல் மாணவர்களுக்கு குறுாப் கிளாஸ் கொடுத்து வந்துள்ளான். இவ்வாறு குறுாப் கிளாசில் கற்றுக் கொண்டிருந்த 17 வயதான மாணவியை காதலித்த போது பெற்றோர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்ததுடன் மாணவியின் உறவினர்களால் ஜெயப்பிரகாஸ் மீது தாக்குதலும் நடாத்தப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக நாம் ஏற்கனவே தகவல்களை வெளியிட்டிருந்தோம். இதன் பின்னர் பல்வேறு தரப்புக்கள் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் பின் குறித்த மாணவியை ஜெயப்பிரகாஸ் திருமணம் செய்வதாக முடிவு செய்யப்பட்டது. அதுவம் மாணவியும் ஏ.எல் பரீட்சை எழுதி பல்கலைக்கழகம் கிடைத்தால் பட்டதாரியாக வந்த பின்னரே திருமணம் செய்வதாக முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறான நிலையில் குறித்த மாணவி யாழ் பல்கலைக்கழகத்தில் தற்போது 3ம் ஆண்டு கற்றுக் கொண்டிருக்கும் போது அம் மாணவியின் தங்கையான 21 வயது யுவதியுடன் ஜெயப்பிரகாஸ் தலைமறைவாகியுள்ளான். தற்போது மாணவியின் உறவினர்கள் அவனையும் யுவதியையும் கொலை வெறியில் தேடி வருவதாகத் தெரியவருகின்றது. ஜெயப்பிரகாஸ் பணியாற்றும் அலுவலகத்திற்கு 3 தடவைகள் மாணவியின் உறவுகள் வந்து அவனைத் தேடிச் சென்றுள்ளதாக அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜெயப்பிரகாசின் காதலிக்கும் ஜெயப்பிரகாசுக்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் உருவாகுவதாகவும் தனது தரப்பு நியாயத்தை காதலியின் தங்கையிடம் ஜெயப்பிரகாஸ் முறையிட்டு வந்துள்ளதாகவும் அந்த நிலையிலேயே இருவரும் காதல் உறவு கொண்டிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாணவியின் உறவுகளின் அட்டகாசத்தை கண்டு அலுவலகத்தின் பணிப்பாளர் பொலிசாருக்கு முறையிட ஆயத்தமாகியுள்ளதாகவும் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.





