புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிரான்ஸ் தர்மேந்திரா யாழிலிருந்து சென்ற மனைவி மீது சந்தேகம்! குழந்தையின் மரபணு பரிசோதனையின் பின் மனைவி விவாகரத்து!

இவனது பெயர் பாலேந்திரன் தர்மேந்திரா. வயது 33. சுன்னாகம் பகுதியைச் சேர்ந்தவன். கடந்த 11 வருடங்களாக பிரான்ஸ் Clichy-sous-Bois பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் Commis de Cuisine ஆக வேலை செய்கின்றான். 2022ம் ஆண்டு இவனுக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பட்டதாரியை திருமணம் பேசி முடித்திருந்தார்கள். 2023ம் ஆண்டு குறித்த பெண் திருமணம் முடித்து பிரான்ஸ் சென்றுள்ளார். அதன் பின்னர் 2024ம் ஆண்டு குழந்மை பிறந்துள்ளது. இந் நிலையில் தனது நண்பர்களின் தகாத நட்புக் காரணமாக அவர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு அவர்கள் கூறும் கதைகளைக் கேட்டு மனைவி மீது தர்மேந்திரா சந்தேகம் அடைந்துள்ளான். தர்மேந்திராவின் நண்பன் ஒருவன் மனைவியுடன் தொடர்பு என அவனது ஏனைய நண்பர்கள் கூறியதை தர்மேந்திரா நம்பியதாகத் தெரியவருகின்றது.

இதன் காரணமாக கணவன் மனைவிக்கிடையில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் தனது குழந்தை தனக்குப் பிறக்கவில்லை என மனைவியை தர்மேந்திரா தாக்கியதுடன் குழந்தையின் பிறப்பு தொடர்பாக மரபணுப் பரிசோதனை நடாத்த முற்பட்டுள்ளான். அதற்கு மனைவி உடன்பட்டு டீஎன்ஏ பரிசோதனையும் நடந்து குழந்தை தர்மேந்திராவுடையது என உறுதிப்படுத்தப்பட்டுது. அதன் பின்னர் மனைவி தனது பிள்ளையுடன் தனது ஒன்றுவிட்ட அண்ணன் குடும்பத்தினருடன் பிரான்சில் வசித்து வருவதுடன் விவாகரத்துக்கும் விண்ணப்பித்துள்ளதாகத் தெரியவருகின்றது. ஆனால் மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழ்வதற்கு தர்மேற்திரா கடும் முயற்சி செய்து வந்தும் அது தோல்வியில் முடிவடைந்துள்ளது.

இவ்வாறான நிலையில் தற்போது மனைவியின் உறவினர்கள் தெரிவித்துள்ள தகவல் என்னவெனின் தர்மேந்திராவுக்கு யாழ்ப்பாணத்தில் இன்னொரு பெண்ணை திருமணம் செய்வதற்கு அவனது நண்பர்கள் தீவிர முயற்சி எடுத்து வருவதாகவும் ஆகவே இவன் தொடர்பாக யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய தமிழ்ப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இரு்ககுமாறும் கேட்டுள்ளார்கள்.

திருமணமாகி யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற தமது மகளுக்கு பிரான்சில் எந்தவித நட்புக்களும் இல்லாத நிலையில்  பிரான்சில் நடந்த திருமண வரவேற்று விருந்துபசாரத்தின் போதும் அதன் பின்னரும் தர்மேந்திராவே அவனது நண்பர்களை அடிக்கடி வீட்டுக்கு கூட்டி வந்து மது அருந்தி வந்துள்ளான் என்றும் அதன் பின்னர் தானே தனது மனைவியுடம் நண்பர்கள் தொடர்பு என சந்தேகித்து சண்டையிட்டுள்ளான் என்றும் தெரிவித்துள்ள உறவுகள்  தமது மகளுக்கு நடந்தது போல் வேறு அப்பாவி யுவதிகள் இவனிடம் மாட்டுப்பட்டு கேவலப்படுவதைத் தவிர்க்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

இவனது புகைப்படத்துடன் யாராவது புறோக்கர்மார் உங்களிடம் வந்தால் அவனுக்கு அடி போட்டு துரத்தி விடுங்கள் எனும் மனைவியின் உறவுகள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.