யாழில் கனேடிய தமிழ்த் தம்பதிகளை கொலை செய்ய உத்தரவிட்ட கனடா ஐயப்பன் கோவில் தலைவன் தம்பிராஜாவுக்கு பிடியாணை!! வீடியோ
கனடா ஸ்காபுறோ பகுதியில் 40 ஆண்டுகளுக்கு முன் ஐயப்பன் கோவிலை நிறுவி நிர்வகித்து வந்த நாகலிங்கம் சுப்பிரமணியம் மற்றும் அவரது மனைவி சுப்பிரமணியம் இந்திரகுமாரி ஆகியோர் தமது சொந்த ஊரான யாழ் அனலைதீவுப் பகுதியில் கடந்த 2023ம் ஆண்டு வந்து தங்கியிருந்த போது பிப்ரவரி 24, 2023 அன்று படகு ஒன்றின் மூலம் அனலைதீவில் தரையிறங்கியவர்களால் கொடூரமாக வெட்டி காயப்படுத்தப்பட்டார்கள். குறித்த தாக்குதல் அந் நேரத்தில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் மற்றும் அதற்கு திட்டமிட்ட கிளிநொச்சிப் பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டிருந்தாலும் குறித்த தாக்குதலை நடாத்துமாறு உத்தரவிட்ட கனடா ஸ்காபுறோப் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலின் 2023ம் ஆண்டு தாக்குதல் நடைபெற்ற போது தலைவராக இருந்த தம்பிராஜா கந்தை பிடிபடாது கனடாவில் செயற்பட்டு வந்துள்ளார். தற்போது அவரை பிடிப்பதற்கான பிடிவிறாந்து இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விபரங்களையும் உங்களுக்காகத் தருகின்றார். முழக்கம் திரு
கனடா ஐயப்பன் கோவில்


