புதினங்களின் சங்கமம்

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்ட 500 பொலிஸ் அதிகாரிகள் மீது பாய்கின்றது சட்டம்!

போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 500 பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. இத்தகவலை பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒரு குழுவினரை பணிநீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.பஹலகம காவல்துறை கல்லூரியில் பயிற்சி பெறும் பொலிஸ் அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்துக்கொண்ட போதே பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.