புதினங்களின் சங்கமம்

யாழில் பீத்தாண்டியுடன் உட்பட்ட காவாலிகளுடன் அந்தரங்க தொடர்பில் இருந்த பிரதிப் பொலிஸ்மா அதிபரின் பி.ஏ சுபசிங்கவுக்கு உடனடி இடமாற்றம்!!

யாழில் உள்ள காவாலிகளு்டன் நெருங்கிய தொடர்பில் இருந்த வடக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் பி.ஏ ஆக தொழிற்பட்ட சார்ஜன் சுபசிங்க உடனடியாக அநுராதபுரத்திற்கு இடமாற்றம் செய்ய்ப்படவுள்ளார். அண்மையில் பீத்தாண்டி என்ற காவாலியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த செய்தியை நாம் வெளியிட்டிருந்தோம். அந்த இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.  மிக நீ்ண்ட காலமாக குறித்த பொலிஸ் சார்ஜன் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றி பல்வேறுபட்ட குற்றச் செயல்களுக்கு உறுதுணையாக இருந்து வந்துள்ளதாகத் தெரியவருகின்றது. வேறு மாவட்டங்களுக்கு இவருக்கு இடமாற்றம் வந்தாலும் அதனை தனது செல்வாக்கால் நிறுத்திவிட்டு வடக்குப் பகுதியில் கடமையாற்றி வந்துள்ளதும் தெரியவருகி்ன்றது.

யாழில் முக்கிய ரவுடியும் பலரின் அடியாளாகவும் தொழிற்பட்ட பச்சை பொறுக்கி பீத்தாண்டி கைது!! நடந்தது என்ன?