புதினங்களின் சங்கமம்

யாழில் 73 வயதுக் காவாலியின் லீலைகள்!!

யாழில் நகர்ப்பகுதிக்கு அருகாமையில் 73 வயதுக் காவாலி ஒருவர் உள்ளார். ‘கோர்ட்டும் பொலிசும் எனக்கு தண்ணி பட்டபாடு என்பது இவர் பிறரை மிரட்ட சொல்லும் பன்ஞ் வசனம். தன்னை எதிர்போர் மீது பொலிசில் பொய் முறைப்படுகள் செய்தும் பொய் வழக்குப்போட்டும் அவர்களை இழுத்தடிப்பது இவருக்கு கைவந்த கலை. பெண்களிடம் தவறாக நடக்க எத்தனிப்பதும் அவர்கள் எதிர்த்தவுடன் அவர்கள் நடத்தை சரியில்லாததால் தான் திருத்தியபோது தன் மீது பழி போடுவதாக பிளேட்டைத் திருப்புவது கனகாலமாக இவரது உத்தியாக உள்ளது
இவருக்கு 2009ம் ஆண்டின் பின் திடீரென்று வீடுகளும் பணமும் சேர்ந்துள்ளது. பல தொழில்களில் ஈடுபட்டு தற்போது வீட்டுப்பொருள், தண்ணீர் விற்பனை செய்கிறார்.

ஆரியகுளம் பகுதியில்இவருக்குச் சொந்தமான வீடொன்று உண்டு.முழு வீட்டையும் விடுதியாக நடத்துவதற்கு மாநகரசபையில் அனுமதி பெற்றுள்ளாரா என்பது ஆராயப்படவேண்டியது.

அங்கு பெண்களுக்கு அறைகள் கொடுக்கிறார்.அங்கு தங்கியிருந்த யுவதியொருவரிடம் ‘இரவு படுக்க வரவா’ என்று கேட்டிருந்தார். யுவதி தனது வீட்டுக்கு தெரிவித்து அவரது சகோதரர்கள் பொலிசில் முறையிட்டனர்.பொலிசார் விசாரித்து எச்சரித்து விட்டு அனுப்பியுள்ளனர்.

அந்த யுவதி நடத்தை சரியில்லாததால் தான் கண்டித்ததாகவும் அதனால் தன் மீது பழி போடுவதாகவும் தன்னை பொலிசில் மாட்டிவிட்டதாகவும் இப்போது யுவதி மீது பழி போடுகிறார்.

முன்னர் அந்த வீட்டில் தாதியர் வாடகைக்கு தங்கியிருந்தபோது நள்ளிரவில் எவனோ நுழைந்ததாக ஊடகங்களில் பரபரப்பாக செய்தி வந்தது பின்னர் அப்படியே அது அமுங்கி விட்டது குறிப்பிடத்தக்கது.

அறைகளில் தங்கியிருக்கும் பெண்கள் மாலையில் வேலை முடிந்து அறைகளுக்குத் திரும்பி குளிக்க ஆயத்தமான ஆடைகளுடன் நடமாடும் வேளையில்தான் இவர் வீட்டை பார்க்க வந்ததாக கூறி வீட்டுக்குள் நுழைந்து வலம் வருவாராம்.அப்போது இவரது ஸ்மார்ட்போன் கையில் இருக்குமாம்.

தென்மராட்சியில் இவரது வீட்டில் வெளிநாட்டில் இருக்கும் ஒருவரின் மனைவியையும் அவரது வயது வந்த இரு மகள்களையும் குடிவைத்தார்.வீட்டில் ஒரு அறையை தனது பாவனைக்கு வைத்துக் கொண்டார்.அவர்கள் விடிகாலையில் நித்திரயாக இருக்கும்போது இவர் தான் வைத்திருந்த திறப்புகளைக் கொண்டு வீட்டைற்குள் நுழைந்து நடமாடுவார்.பெண்மணி ஆட்சேபித்தபோது தேங்காய் பிடுங்கவந்ததாக அல்லது காணியில் வேலை யுள்ளது என்று சாட்டு கூறுவார்.

ஒருமுறை மகள்களில் ஒருவர் குளித்துக் கொண்டிருந்தபோது இவர் குளியறைக்குள் பார்த்ததை மற்ற மகள் பார்த்து விட்டு தாயிடம் கூறி அவர்கள் சத்தமிட்டபோது அங்கிருந்து நழுவியவர் பெண்மணியின் வெளிநாட்டில் இருந்த கணவனுக்கு அழைப்பெடுத்து அந்தப் பெண்ணுக்கும் வேறு ஒருவருக்கும் கள்ள்த்தொடர்பிருந்ததாகவும் அதனைத் தான் கண்டித்ததால் குளியறைக்குள் பாற்த்ததாக தன்மீது குறை சொல்வதாக பழியை அந்த பெண்மீது போட்டார்.

குறித்த கணவன் அவசரமாக நாடு திரும்பி குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு பொலிசிடம் சென்று இவரை உளவளசிகிச்சைக்கு அனுப்பினர்.

ஆனாலும் இவர் இன்னும் திருந்திய பாடில்லை.

யாழ்.பல்கலைக்கழகத்துக்கு சமீபமாக உள்ள ஆலயத்தில் இவர் பொதுச்சபை உறுப்பினர்.போரால் காசுபார்த்த இவர் ஆலயம் தான் விரும்பியபடியே நடக்க வேண்டும் என்று குழப்பம் விளைவிக்கிறார்.பரிபாலன சபையில் இருப்பவர்கள் மீது கள்ளர் என பழிபோட்டு நிர்வாகம் நடக்காமல் குழப்பி வருகிறார்.இது பற்றி யாராவது இவருடன் சமாதானமாக கதைக்க வீட்டுக்குச் சென்றால் ஒளித்திருந்துவிட்டு பொலிசில் தன்னை அடிக்க,கத்தியால் குத்த வந்ததாக முறையிடுவார். இவர் ஆட்களை தூண்டிவிட்டு குழப்பம் விளைவிப்பதால் குறித்த ஆலய நிர்வாக பொதுச்சபைக் கூட்டங்கள் குழப்பத்திலேயே முடிகின்றன.

இவனைப் போன்ற திருட்டுப்பூனைகளுக்கு புலிகள் காலத்தில் நல்ல மருந்து கிடைத்திருக்கும்.ஆனால் இலகுவாக வந்த பணமும் போதுமான நேரமும் இருப்போர் 2009க்குப் பிறகு பிறரை துன்புறுத்தி இன்பமடைகிறார்கள்.இந்த கேடுகெட்ட பூனைகளுக்குமணிக்கட்டப் போவது யார் என்பதே இப்போது கேள்வியாக உள்ளது.