Home புதினங்களின் சங்கமம் யாழில் பெருந்தொகையான போதைப்பொருள் மீட்பு.!

யாழில் பெருந்தொகையான போதைப்பொருள் மீட்பு.!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மாமுனைப் பகுதியில் நேற்று இரவு 11:30 மணியளவில் பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கடற்படையினர் மற்றும் மருதங்கேணி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று இரவு விசேட சுற்றிவளைப்பு ஒன்று மாமுனைப் பகுதி முழுவதும் மேற்கொள்ளப்பட்டது.

இச் சுற்றிவளைப்பில் 38 பொதிகள் அடங்கிய 71.400kg கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் தப்பி சென்றுள்ளார். மீட்கப்பட்ட கேரள கஞ்சா மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.