Home புதினங்களின் சங்கமம் வவுனியா யாழ். வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் பலி !!

வவுனியா யாழ். வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் பலி !!

வவுனியா யாழ். வீதியில் புதிய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் இன்று வெள்ளிக்கிழமை(4) இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் புளியங்கூடலை சேர்ந்த 69 வயதான இ. ஜெகதீஸ்வரன் என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

யாழில் இருந்து வவுனியா நோக்கி பயணித்து கொண்டிருந்த கயஸ் ரக வாகனம் வவுனியா யாழ் வீதியில் சென்று கொண்டிருந்த துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவருடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.