புதினங்களின் சங்கமம்

அப்புத்தளையில் வயிற்று வலி என ஆசுப்பத்திரிக்கு போன 14 வயதுச் சிறுமி கர்ப்பம்!! திருவிளையாடல் புரிந்தவர் கைது!!

வயிற்று வலி காரணமாக தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 14 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளதாக அப்புத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அப்புத்தளை, கெல்பன் தோட்டத்தை சேர்ந்த சிறுமி, வயிற்று வலி காரணமாக நேற்று சனிக்கிழமை (31) இரவு தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 சிறுமியை பரிசோதித்த வைத்தியர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக  வைத்தியசாலை பொலிஸாரால் சிறுமியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், கெல்பன் தோட்டத்தை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான  சிரேஷ்ட  பொலிஸ் அத்தியட்சகர்,  ரோஷன் அமரசிங்கவின் ஆலோசனையின் பேரில், அப்புத்தளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி செபால ரத்நாயக்க தலைமையில் பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்,

மேலும் சந்தேகநபர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.