Home புதினங்களின் சங்கமம் கட்டைபறிச்சானில் இராசரெத்தினத்தை மிதிச்சுக் கொன்றது யானை!! வீடியோ

கட்டைபறிச்சானில் இராசரெத்தினத்தை மிதிச்சுக் கொன்றது யானை!! வீடியோ

யானை தாக்குதலுக்கு உள்ளாகிய முதியவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (30) காலை இடம் பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் மூதூர் -கட்டைபறிச்சான் பகுதியைச் சேர்ந்த சிவக்கொழுந்து இராசரெத்தினம் (வயது 75) என சம்பூர் பொலிஸார் குறிப்பிட்டனர்.
உயிரிழந்த நபர் , தனது வயலுக்கு குருவிக் காவலுக்குச் சென்றபோது கணேசபுரம் வீதியில் வைத்து இடைமறித்து யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
May be an image of 15 people and grassMay be an image of 3 people and treeMay be an image of 14 people and treeMay be an image of 13 people and tree