Home புதினங்களின் சங்கமம் அதி வேகம்!! யாழில் 25 வயது பிரணவன் பலி!!

அதி வேகம்!! யாழில் 25 வயது பிரணவன் பலி!!

யாழ் பருத்தித்துறை, மந்திகை, மடத்தடி பகுதியில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ் நெல்லியடி நகரப்பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த, அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பிரபாகரன் பிரணவன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு, மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.