மிகப் பெரும் மோசடிகாரர்கள் மற்றும் சமூகவிரோத செயற்பாட்டாளர்கள் போன்றவர்களின் உறைவிடமாக மாறியுள்ளது கிளிநொச்சி. சமூகவலைத்தளங்கள் மூலம் அப்பாவிப் புலம்பெயர் தமிழர்களை ஏமாற்றி பணம் பறிப்பது, சபல புத்தியுள்ள புலம்பெயர் தமிழ் குடும்பஸ்தர்களை கிளிநொச்சிக்கு வரவழைத்து விபச்சாரிகள் மூலம் பணம் பறிப்பது, உதவித் தொகை வழங்குவது என கூறி அப்பாவி இளம் குடும்பப் பெண்களை புலம்பெயர் தமிழ் குடும்பஸ்தர்களுடன் தவறான உறவுகளைப் பேண விடுவது, கஞ்சா மற்றும் போதைப் பொருள் பாவனை்ககு மாணவர்களை உட்படுத்துவது, பேஸ்புக் மற்று்ம் ரிக்ரொக் போன்றவற்றில் சினிமா வசனங்கள் மற்றும் பாட்டுகளுக்கு பாவனை காட்டி தங்களை கதாநாயகர்கள் என காட்டி செயற்படுவது போன்றவற்றை குறித்த சமூகவிரோதிகள் செய்து வருகின்றார்கள். இவர்களை சமூகவலைத்தளங்களில் பின் தொடரும் அப்பாவிகள் இவர்களின் உண்மையான திருவிளையாடல்கள் தெரியாது இவர்களைக் கதாநாயகர்களாக நினைத்து வருகின்றார்கள். கிளிநொச்சியில் மிகப் பெரும் சமூகவிரோதியாக உருவாகியுள்ளவன் டிகே கார்த்தி என்பவன். இவன் கஞ்சா போதைக்கு அடிமையானவன். இவன் தொடர்பாக சில வருடங்களுக்கு முன் நாம் வெளியிட்ட பதிவினை கீழே தந்துள்ளோம்.
இந் நிலையில் தற்போதைய அரசாங்கமோ அல்லது வைத்தியர் அர்ச்சுனாவோ வழிநடத்தி வருவதாக பலராலும் சந்தேகிக்கப்பட்டுவருவதும் ஆனால் அவ்வாறு இரு தரப்பாலும் வழி நடாத்தாது சுயாதீனமான சிலரால் நடாத்தப்படுவதாக வம்பன் புலனாய்வாளர்களால் அறியப்பட்டதுமான ஒரே பெயர்களைக் கொண்ட ஒரு பேஸ்புக் கணக்கு மற்றும் ஒரு பேஸ்புக் விருப்புப் பக்கம் ஆகிய இரண்டு தளங்களிலிலும் வன்னி மற்றும் யாழ்ப்பாணம் தொடர்பாக பல பதிவுகள் வெளியாகியிருந்தன. இந்த இரு பேஸ்புக் தளங்கள் தொடர்பாக மிக விரிவான தகவல்களை நாம் பின்னர் தருகின்றோம். இதே வேளை அந்த சமூகவலைத்தளங்களில் கிளிநொச்சி டிகே கார்த்தி என்பவன் தொடா்பாகவும் பதிவுகள் வெளியாகியிருந்தது. இந் நிலையில் குறித்த பதிவுகளை வெளியிட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவர் மீது கொலை வெறித தாக்குதல் நடாத்தபட்டுள்ளது.
இது தொடர்பாக குறித்த சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்.









