புதினங்களின் சங்கமம்

யாழ் இந்து தரம் 10 மாணவர்களில் பலர் YMD என்ற பெயரில் துாசண குறுாபில் இணைவு! பலர் அடிதடி குறுாப்பில் இணைவு!!

யாழ் இந்துக்கல்லுாரியில் கல்வி பயிலும் மாணவர்களில் தரம் 10 மாணவர்கள் பலர் குறித்த தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களை குறுாப்பாக இணைத்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. YMD என்ற பெயரில் குறித்த தரத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் குறுாப் ஒன்றை செயற்படுத்தி வருகின்றார்களாம். அந்த குறுாப் பச்சைத் துாசணங்களில் கதைப்பது மற்றம் ஆபாச கதைகள் மற்றும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக குறித்த வகுப்பில் கற்கும் மாணவர்களில் பெற்றோர் சிலர் தெரிவித்துள்ளார்கள். அத்துடன் மதிய இடைவேளையின் போது பல மாணவர்கள் குறுாப்பாக சேர்ந்து அடிதடியிலும் இறங்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ் இந்துக்கல்லுாரி அதிபர் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை காட்டாது மாணவர்களுக்கு விளையாட்டு மோகத்தையும் கல்வி தவிர்ந்த ஏனைய புறச் செயற்பாடுகளிலும் அவர்களை ஈடுபடுத்தி வருகின்றார் என்ற குற்றச்சாட்டுக்கள் பெற்றோர் மத்தியில் உள்ள நேரத்தில் பாடசாலையின் ஒழுக்கத்தைக் கேள்விக்குறியாக்கும் மாணவர்களையும் முன்னைய அதிபர் காலத்தில் செயற்பட்டது அவர்களைக் கண்டும் காணாமல் விடப்போகின்றாரா என்ற கேள்வி பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.