புதினங்களின் சங்கமம்

19 நாட்களாக வசந்தியைக் காணவில்லை!! பொலிசாருக்கு உதவுங்கள்!!

கடந்த 19 நாட்களாக காணாமல்போயுள்ள பெண் ஒருவரை கண்டுபிடிக்க பெலியத்தை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

48 வயதுடைய பெண் ஒருவர் ஜனவரி மாதம் 26 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக பெலியத்தை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் காணாமல்போயுள்ள பெண்ணின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த புகைப்படத்தில் உள்ள பெண் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் பெலியத்தை பொலிஸ் நிலையத்தின் 071 – 8591497 அல்லது 047 – 2243222 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல்போயுள்ள பெண்ணின் விபரங்கள் ;

பெயர் – ஜி. வசந்தி

வயது – 48

முகவரி – அங்குனவெல்ஹேன, ஜயசேகர மாவத்தை, பெலியத்தை

அங்க அடையாளம் – 05 அடி உயரம்