மக்களின் ஆர்ப்பாட்டத்தையும் பொருட்படுத்தாது சாராயக்கடையில் சாராயம் வாங்கும் குடிகாரர்கள்! வீடியோ
பெரியநீலாவணையில் அமையப்பெற்ற புதிய மதுபான சாலை கடந்த இரண்டு மாதங்களாக அந்த பிரதேச பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இன்றைய தினம் அந்த மதுபான சாலை திறக்கப்பட்டது.
இருந்த போதும் இன்றைய தினமும் ஒரு சில பொதுமக்கள் தங்களுடைய எதிர்ப்பு நடவடிக்கையை செய்த போதும் மது பிரியர்களும் ஆர்வமாக அந்த மதுபான சாலையில் மதுபான போத்தல்களை வாங்கிச் செல்லும் காட்சி மிகவும் மன வேதனை அளிக்கிறது!

