புதினங்களின் சங்கமம்

அம்பாறையில் பூசாரி சந்திரன் தவறான முடிவு..!

தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் திங்கட்கிழமை (23) காலை வேளையில் கல்முனை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வந்த செல்லத்துரை வீதி, பெரிய நிலாவனை 01 சேர்ந்த பூசாரி சந்திரன் (வயது 54) என்பவரே மரணமடைந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கல்முனை வடக்கு வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.