Home புதினங்களின் சங்கமம் யாழ் காரைநகர் கடற்பரப்பில் 214 கிலோ கஞ்சாவுடன் கரை ஒதுங்கிய படகு!! இருவர் கைது!!

யாழ் காரைநகர் கடற்பரப்பில் 214 கிலோ கஞ்சாவுடன் கரை ஒதுங்கிய படகு!! இருவர் கைது!!

யாழ்ப்பாணத்தில் சுமார் 214 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – காரைநகர் கசூரினா கடற்கரைக்கு அண்மித்த பகுதியில், இன்றைய தினம் காலை எரிபொருள் முடிவடைந்த நிலையில் படகொன்று கரையொதுங்கியுள்ளது.

படகு சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்டமையால் அதனை புலனாய்வாளர்கள் சோதனையிட்ட போது , 92 பொதிகளில் 213. 899 கிலோ கிராம் கேரளா கஞ்சா படகினுள் காணப்பட்டுள்ளது.

அதனை அடுத்து , படகில் வந்த இருவரையும் கைது செய்து , படகில் மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்