பிரான்ஸ் றியேம்ஸ் பகுதியில் 41 வயதான 3 பிள்ளைகளின் தந்தையான யாழ்ப்பாணத் தமிழ்க் குடும்பஸ்தர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவி கொடுத்த முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த குடும்பப் பெண் யாழ்ப்பாண வைத்தியர் அர்ச்சுனாவின் உருவத்தை தனது இடது கை மூட்டுப் பகுதியில் பச்சை குத்தியதை அறிந்த கணவன் மனைவியின் பச்சை குத்திய கைப் பகுதியை பொல்லால் கடுமையாகத் தாக்கிக் காயப்படுத்தியதுடன் மனைவியின் முகம் மற்றும் வயிற்றுப் பகுதிகளிலும் கைகளால் தாக்கி காயங்களை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது. அரசாங்கத்தின் பொறுப்பில் அரச விடுதியில் வாழும் குறித்த குடும்பத்தைச் சேர்ந்த கணவனே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் அர்ச்சுனாவுக்கு ஆதரவான ரிக்ரொக் வலைத்தளத்தில் பெரும் கருத்து மோதல்கள் இடம்பெற்றுவருகின்றது.
வெளிநாடுகளில் வாழும் பல தமிழ்க் குடும்பப் பெண்கள் ரிக்ரொக் மற்றும் பேஸ்புக் சமூகவலைத்தளங்களில் வைத்தியர் அர்ச்சுனாவுக்கு கண்மூடித்தனமான ஆதரவை வழங்கி வருவதுடன் பெருமளவு பணத்தையும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தெரியாது வழங்கி வருவதாகவும் தெரியவருகின்றது. இச் சம்பவங்களால் புலம்பெயர் தேசங்களில் வாழும் கணவர்கள் பலர் பெரும் அவஸ்தையை அனுபவித்து வருகின்றார்கள் எனவும் அறிய முடிகின்றது. மேலும் பல சம்பவங்கள் வைத்தியர் அர்ச்சுனாவின் திருவிளையாடல்களால் நடந்தேறி வருகின்றன. அவை தொடர்பாக நாம் இங்கு விபரமாக வெளியிடவுள்ளோம்.





