இலங்கையை சுற்றி நடக்கும் யாழ்ப்பாண, தமிழ் யூரியூப்ர்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் குதிப்பார்களா? ஒருவர் குதிக்கின்றார்!!
வைரல் வீடியோக்களுக்கு பெயர் பெற்ற பிரபல இலங்கை யூடியூபரான அஷேன் சேனாரத்னா, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பில் போட்டியிடப் போவதை உறுதிப்படுத்தியுள்ளார். சமூகப் பிரச்சினைகள் மற்றும் தொண்டு முயற்சிகளில் கவனம் செலுத்தும் அவரது உள்ளடக்கம் காரணமாக அவர் சமூக ஊடகங்களில் பிரபலம் அடைந்தார்.
இவரது செயற்பாட்டைப் பார்த்து இலங்கையைச் சுற்றி நடந்து திரியும் எங்கட யூரியூப் பெடியலும் நாடாளுமன்றத் தேர்தலில் குதித்தால் தமது நிலை என்னவாகும் என வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டு காத்திருக்கின்றார்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

